வேளாண்மைப் பொறியியல் துறை வழங்குகிறது விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள்

விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் கருவிகளை வேளாண்மைப் பொறியியல் துறை வழங்குகிறது

வேளாண்மைப் பணிகளுக்கான ஆள் பற்றாக் குறை என்பது இன்று விவசாயிகள்
எதிர்கொள்ளும் பெரும் சவால்களில் ஒன்றாகும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு
காணும் வகையில் பல்வேறு வேளாண் பணிகள் தற்போது இயந்திரமயமாகி வருகின்றன. இச்சூழலில், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தும் விதத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை குறைந்த வாடகையில் வழங்கி வருகிறது.

http://upload.wikimedia.org/wikipedia/commons/b/b0/Agriculture_in_Volgograd_Oblast_002.JPG
சிறு பாசன திட்டத்தின்கீழ் பாசன ஆதாரங்களை மேம்ப டுத்தவும், பாசனப்
பரப்பினை நிலைப்படுத்திடவும், மேற் பரப்பு மற்றும் நிலத்தடிநீரை
ஒருங்கிணைத்து பாசனம் செய்து வேளாண் உற்பத் தியை பெருக்கிடவும் பல
நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
அந்த வகையில், ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கு இரண்டு வகையான கருவிகளை வேளாண்மைப் பொறியியல் துறை வாடகைக்கு வழங்குகிறது. சுழல் விசைத்துளை கருவி மூலம் 6 அங்குல ஆழ்துளை கிணறு அமைக்க மீட்டருக்கு ரூ.120 என்றும், 8 அங்குல ஆழ்துளை கிணறு அமைக்க மீட்டருக்கு ரூ.130 என்றும் மற்றும் 10 அங்குல ஆழ்துளை கிணறு அமைக்க மீட்டருக்கு ரூ.140 என்றும் வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெர்குசன் விசைத்துளை கருவி மூலம் 8 அங்குல ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 300 வாடகையாக வசூலிக்கப்படுகிறது.
நில மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வயல் பரப்பை சமப்படுத் துவதற்காக
புல்டோசர்கள் வாடகைக்கு வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.
950 வாடகைக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர வேளாண் பணிகளுக்கு நிலங்களை தயார் செய்யவும், உழுது
பண்படுத்திடவும் டிராக்டர்கள் வாடகைக்கு தரப்படுகின்றன. உளி கலப்பை,
சட்டி கலப்பை, கொலு கலப்பை மற்றும் சுழல் கலப்பை வசதி கொண்ட
டிராக்டருக்கு விவசாயிகள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.390 மட்டும் வாடகையாக
செலுத்த வேண்டும்.
மேலும், நெல்நாற்று நடவு செய்யும் இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.
1,030 என்ற வாடகையில் கிடைக்கிறது. டிராக் செயின் மூலம் வயல்களில் நகரும்
நெல் அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ. 1,600 மற்றும் டயர்கள் பொருத்தப்பட்ட
நெல் அறுவடை இயந்திரம் மணிக்கு ரூ. 940 என்ற வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்கள் ஒவ்வொரு வருவாய் கோட்ட அளவிலும் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட அளவில் செயற் பொறியாளர் அலுவலகமும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளன. விவசாயிகள் தங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகி தங்களுக்குத் தேவையான வேளாண்
இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்திக்
கொள்ளலாம்.

வேளாண்மை பொறியியல் துறையின் மாவட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களை அணுக கீழ்காணும் தொலைபேசி எண்களில் அலுவலக நேரங்களில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.
காஞ்சிபுரம் 044 24327238
திருவள்ளூர் 044 27663843
விழுப்புரம் 04146 227788
கடலூர் 04142 292358
வேலூர் 0416 2266603
திருவண்ணாமலை 04175 232908
சேலம் 0427 2415266
நாமக்கல் 04286 275472
தருமபுரி 04342 230948
கிருஷ்ணகிரி 04343 232959
கோயம்புத்தூர் 0422 2434838
ஈரோடு 0424 2262067
திருப்பூர் 0421 2217574
நீலகிரி 0423 2443734
திருச்சி 0431 2419447
புதுக்கோட்டை 04322 221816
கரூர் 04324 255850
அரியலூர் 04329 220945
பெரம்பலூர் 04328 224351
தஞ்சாவூர் 04362 235570
திருவாரூர் 04366 241577
நாகப்பட்டினம் 04365 221083
மதுரை 0452 2678639
திண்டுக்கல் 0451 2432293
தேனி 04546 253439
விருதுநகர் 04562 252192
ராமநாதபுரம் 04567 232493
சிவகங்கை 04575 240213
திருநெல்வேலி 0462 2551312
தூத்துக்குடி 0461 2430687
கன்னியாகுமரி 04652 278381