நுண்ணுயிர் உரங்கள் – நீலப்பச்சை பாசி

இயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் இடுபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து மண் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம்.

இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கை:

அனைத்து தாவரங்களுக்கும் தழைச்சத்து இன்றியமையாதது.

நைட்ரஜன் எனப்படும் தழைச்சத்தில் இருந்துதான் தாவரங்களில் உள்ள புரதங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, தழைச்சத்தை பெறுவதற்கு நுண்ணுயிர் அடங்கிய உரங்களையோ அல்லது நுண்ணுயிரோடு இயைந்து வாழும் உயிரினங்களையோ உரமாக இட்டு சாகுபடி செலவைக் குறைக்கலாம்.

மணிச்சத்தை மண்ணில் இருந்து செடிகளுக்கு கிடைக்குமாறு செயல்படும் பாஸ்போ பாக்டீரியா மற்றும் வேர் உட்பூசணங்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நீலப்பச்சை பாசி:

  • இதில் உள்ள நைட்ரஜேனஸ் என்ற பொருள் வெளியில் உள்ள நைட்ரஜன் வாயுவை தழைச்சத்து உரமாக ஆக்குகிறது.
  • இந்த வகை பாசியை உழவர்கள் தமது நிலங்களில் நாற்றாங்கால் அமைத்து, விதைத்து 15 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
  • தொடர்ந்து 4 பருவங்களுக்கு இந்த பாசியை வயலில் இட்டால் தானாக வளர்ந்து பெருகத் தொடங்கி விடும்.
  • இதன் மூலம் 25 சதவீதம் ரசாயன உரத்தை சேமிக்கலாம்.
  • அதில் தழைச்சத்து மட்டுமின்றி அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் போன்றவையும் உள்ளன.
  • மேலும் மணிச் சத்தை கரையச் செய்து நெற்பயிருக்கு அளிக்கிறது.

Leave a Reply