ஜீவாமிர்தம் இயற்கையான நுண்ணுயிர் கலவை

ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

தயாரிப்பு முறை

நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது)

இவற்றைத் தொட்டியில் விட்டு கலக்க வேண்டும் தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விடவேண்டும். ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான் நுண்ணுயிரிகள் இருக்கின்றன் .ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் இந்த நுண்ணுயிரிகள் இரட்டிப்பு அடைகின்றன்.

இந்த நுண்ணுயிர் கலவைதான் ஜிவாமிர்தம்.

பயன்படுத்தும் முறை

ஜிவாமிர்தம் எல்லா வகை பயிர்களுக்கும் நீரில் கலந்து பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.

ஜீவாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?

தெளிப்புக்காக எடுக்கும்போது கரைசலின் மேற்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் எடுத்து வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும் .ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு வடிகட்டிய ஜீவாமிர்தத்தை குறிப்பிட்ட அளவு நீரில் கலந்து தெளிக்க வேண்டும் .அதேபோல் காய் பிடிக்கும் சமயத்தில் புளித்தமோர் ,முளைகட்டிய தானியக் கலவை ,தேங்காய்த் தண்ணீர் ஆகியவற்றையும் தெளிக்க வேண்டும் .இது அனைத்துப் பயிர்களுக்கும் பொருந்தும் .

ஒரு ஏக்கருக்குத் தெளிப்பதற்குத் தேவையான் அளவுகள்
4 மாதப் பயிர்கள் (120 நாட்கள் )

15 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.

30 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.

60 -ம் நாளுக்கு மேல்,20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

90 -ம் நாள் அல்லது வதை பால் பிடிக்கும் தருணத்தில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.

6 மாதப் பயிர்கள் (180 நாட்கள் )

30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.

60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.

90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

120-ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.

150 -ம் நாளில்,10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

ஓர் ஆண்டு பயிர்களுக்கு

30 -ம் நாளில் 5 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 100 லிட்டர் தண்ணீர்.

60 -ம் நாளில் 10 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 150 லிட்டர் தண்ணீர்.

90 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

120-ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

150 -ம் நாளில் 5 லிட்டர் புளித்த மொருடன் 200 லிட்டர் தண்ணீர்.

180 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

210 -ம் நாளில் 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர்.

240 -ம் நாளில் 20 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

270 -ம் நாளில் 10 லிட்டர் முளைகட்டிய தானியக் கரைசலை 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர்.

அதன் பிறகு மாதந்தோறும் 30 லிட்டர் ஜீவாமிர்தத்துடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும் .

பழ மரங்களாக இருப்பின் காய்கள் முதிர்ச்சி பெறுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு 2 லிட்டர் தேங்காய்த் தண்ணீருடன் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.

ஜீவாமிர்தம் நன்மைகள் என்ன?

ஜிவாமிர்தம் பாய்சசப்படும் பயிர்களை எந்த நோயும் தாக்காது.

ஜிவாமிர்தம் நீரில் கலந்து பயன்படுத்தும் போது மண்புழுக்கள் வரவு அதிகரிக்கிறது .

ஜிவாமிர்தம் அனைத்து வகை மண்ணையும் சத்துநிறைந்த மண்ணாக மாற்றிவிடுகின்றது.

ஜிவாமிர்தம் நுண்ணுயிர்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கிறது.

ஜீவாமிர்தக் கரைசலுடன் மூலிகைப் பூச்சிவிரட்டி, அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரா ஆகியவற்றை கலந்து பயன்படுத்தலாமா?

ஜீவாமிர்தம் என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை பெருக்க உதவும் பொருள். அஸ்திரம் என்பது பூச்சிவிரட்டியாகப் பயன்படுத்தப்படும் பொருள். எனவே எதிர்மறையான இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கலக்கக் கூடாது. வேலை குறையட்டும் என்று எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்யாதீர்கள்.

54 thoughts on “ஜீவாமிர்தம் இயற்கையான நுண்ணுயிர் கலவை

    1. admin Post author

      மகிழ்ச்சி. மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் எங்களை தொடர்புகொள்ளுங்கள்.

    1. admin Post author

      தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்

    1. admin Post author

      ஐயா
      உங்களை EnVivasayam WhatsApp குழுவில் இனைத்துவிட்டோம்.
      நன்றி
      EnVivasayam Team

      1. Vijayakumar

        Please add my number 9********0 or 7*******0 into your whatsapp group.

        Thanks and regards
        Vijayakumar

  1. Baskaran

    hello sir…pls add my number in Envivasaym Whatsapp group…my number is 9095074951…all the best for your work

    1. admin Post author

      வணக்கம் ஐயா
      உங்களை குழுவில் இணைத்துவிட்டோம். தொடர்ந்து உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.
      நன்றி
      EnVivasayam Team

    1. admin Post author

      நிச்சயமாக பயன்படுத்தலாம் ஐயா. ஜீவாமிர்தம் மண்ணில் உள்ள உயிர்ச்சத்தை அதிகரிக்கும். இதனால் மண்புழுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
      நன்றி
      EnVivasayam Team

        1. admin Post author

          வணக்கம் ஐயா,
          விரைவில் உங்கள இணைகின்றோம்.
          நன்றி
          EnVivasayam Team

    1. admin Post author

      வணக்கம் ஐயா,
      விரைவில் உங்கள இணைகின்றோம்.
      நன்றி
      EnVivasayam Team

        1. admin Post author

          வணக்கம் ஐயா,
          விரைவில் உங்கள இணைகின்றோம்.
          நன்றி
          EnVivasayam Team

  2. Karthika vijayakumar

    ஐயா, மிக அருமையான தகவலை மிகவும் எளிமையாக அளித்துள்ளீர்கள். Please add my number in your group. 9********5

    1. admin Post author

      வணக்கம் நண்பரே,
      விரைவில் உங்கள இணைகின்றோம்.
      நன்றி
      EnVivasayam Team

    1. admin Post author

      வணக்கம் ஐயா,
      விரைவில் உங்கள இணைகின்றோம்.
      நன்றி
      EnVivasayam Team

    1. admin Post author

      வணக்கம் ஐயா,
      விரைவில் உங்கள இணைகின்றோம்.
      நன்றி
      EnVivasayam Team

  3. Venkatesh Ramasamy

    Aiya vanakkma,

    Thank you for adding my number in whatsup group. I have a question to be asked, can we use this Jeeva amrutham mixture for coconut trees which is 30 years old.

    If yes, how much quantity to be used per tree.

    Nandri,
    Venkatesh

    1. admin Post author

      வணக்கம் ஐயா,
      நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம். இயற்கை வேளாண்மை முற்றிலும் செயற்கையிலிருந்து வேறுபட்டது. இயற்கையில் இட அளவுக்கு ஏற்ற வாறு தான் பரிந்துரை செய்வார்கள். ஒரு ஏக்கருக்கு இரண்டு லிட்டர் ஜீவமிர்த்த கரைசல் போதுமானதாகும்.
      நன்றி
      EnVivasayam Team

    1. admin Post author

      வணக்கம் ஐயா
      எங்களுக்கு தன்னார்வலர்கள் அதிக அளவு தேவைப்டுகின்றார்கள். உங்களை பற்றிய தகவல்களை envivasayam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். நாங்கள் உங்களை தொடர்புகொள்கின்றோம்.
      நன்றி
      EnVivasayam Team

  4. kalaiyarasan mani

    ungal thagaval anaithum arumai….

    please add my number in your whats up group. +971 5*******0.

  5. Manickam Suresh Kumar

    Dear Sir,

    I have read all your articles. All are good and very usefull. Can you add me in your whatsApp please?. My whatsApp number +968-*******0. Very soon I am going to start organic farming in Tiruvarur area. Thanks and Warm Regards,
    Manickam Suresh Kumar.
    my mail id is – m*******@gmail.com

  6. karthick

    hello sir…pls add my number in Envivasaym Whatsapp group…my number is 9********0
    …all the best for your work

Leave a Reply to CHINNAMUNIYANDI K Cancel reply