இலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்

சிறியாநங்கை கஷhயம்3to5%,பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் கரைசல்
அல்லது  5 சதம் வேப்ப விதைக் கரைசலைத் தெளிக்க கட்டுப்படுத்தலாம்.
வேப்ப இலை கொத்துகளை வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும்.
வேப்ப எண்ணெய் 300 மில்லி மண்ணெண்ணெய் 250 மில்லி மற்றும் காதி சோப் 50 கிராம் ஆகியவற்றை 160 லிட்டர் தண்ணீரில் நன்கு கலந்து காலை வேளையில் இலைப் பிணைப்புகளில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
வேப்பங்கொட்டைத் தூளை 300_to_500 கிராம், 300 மில்லி
மண்ணென்ணையில் 24 மணி நேரத்திற்கு ஊறவைத்து அந்த வடிநீரை 150 கிராம் காதி சோப்புடன் கலந்து காலை வேளையில் தெளிக்க வேண்டும்.
10 கிலோ வேப்ப இலையை விழுது போல் அரைத்து அதனை 1 லிட்டர் நீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை 30நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். இரவு முழுவதும் ஆற வைத்து 200 லிட்டர் நீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
இலந்தை மரக்கிளையால் பிணைக்கப்பட்ட இலைகளை
உரசி,மறைந்திருக்கும் புழுக்களை முட்களால் குத்தி அழிக்கலாம். இது போல
சீமைக்கருவேல கிளைகளையும் பயன்படுத்தலாம்.
4 சதம் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம்.
சோற்றுக் கற்றழை சாறை தெளிக்கலாம்.
சாம்பல் தூவலாம்.
300 மில்லி வேப்ப எண்ணெய்,300 மில்லி புங்கம் எண்ணெய் 150 கிராம் காதி சோப்பு ஆகியவற்றை 13 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
விளக்கு பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.

2 thoughts on “இலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்

  1. Kalaivanan

    வேப்ப இலை கொத்துகளை வயலில் ஆங்காங்கே வைப்பதால் என்ன பயன்?

    1. admin Post author

      வணக்கம் ஐயா,
      வேப்ப இலையில் 12 விதமான நோய்களை தடுக்கும் எதிர்ப்பு பொருள் உள்ளது. இதன் காரணமாக தான் கிராமங்களில் தை பொங்கல் காப்பு கட்டும் பொழுது வேப்பிலை வைத்து கட்டுகிறார்கள். வேலி ஓரங்களில் வேப்பனஞ்செடியை வளரவிடுவதன் காரணமும் இதுதான். வளர்க்க முடியாதவர்கள் வேப்பங்கொத்துகளை வைக்கிறார்கள்.
      குறிப்பு: வேப்ப மரத்தில் செய்த ஏர் கலப்பை கொண்டு உழுதால் கோரை வளராது.
      நன்றி
      EnVivasayam Team

Leave a Reply to Kalaivanan Cancel reply