அன்னாசி

கன்னியாகுமரி பெண் விவசாயியின் இயற்கை அன்னாசி

இயற்கை விவசாய முறையில் ரப்பர் மரங்களுக்கு இடையே அன்னாசியை ஊடுபயிராகப் பயிரிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார் கன்னியாகுமரி பெண் விவசாயி. ரப்பருக்கான விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில், இது வரவேற்கத் தகுந்த மாற்றமாகக் கருதப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரக்கோடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிரேஸ் ராணி. இந்த மாவட்டத்துக்கே உரிய ரப்பர் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்.…